
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* மனிதர்களிடம் அன்பு நிறைந்திருந்தால் உலகிலுள்ள துயரம் அனைத்தும் எளிதாக நீங்கி விடும்.
* உள்ளத்தில் அன்புள்ள ஒருவரால் கோபம் கொள்ள முடியாது. பொறுத்தலே அன்பின் இயல்பு.
* எல்லா செல்வத்திற்கும் அறிவு தான் வேர். அறிவு உள்ளவன் எதில் ஈடுபட்டாலும் வெற்றியே கிட்டும்.
* உண்மையான தெய்வபக்தி வந்து விட்டால் மனதில் தைரியம் எப்போதும் நிலைத்திருக்கும்.
* சோம்பேறியாக இருப்பது பெருங்குற்றம். உழைப்பில் தான் சுகம் இருக்கிறது.
- பாரதியார்